இருபது ஆண்டுகளுக்கு மேல் கணிதம் கற்பித்தலில் அனுபவம் பெற்ற பேராசிரியர் முனைவர். இரா.சிவராமன். சென்னையில் விளங்கும் து.கோ. வைணவக் கல்லூரியின் கணிதத் துறையில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தன் முன்னாள் மாணவர்களின் துணையோடு “பை கணித மன்றம்” என்ற அறக்கட்டளையை 2007 ஆம் ஆண்டில் துவங்கி அதன் நிறுவனராக செயல்பட்டு வருகிறார். கணிதம் மற்றும் அறிவியலின் ஆற்றலை விளக்கும் வகையில் முன்னூறுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை இந்தியா முழுவதிலும் நிகழ்த்தியுள்ளார். இதுவரை 17 புத்தகங்களை எழுதியுள்ளார்.
Be the first to review “இந்திய கணித மேதைகள்”