நாளாம் நாளாம் திருநாளாம்

வரலொட்டி ரெங்கசாமி

This product is currently out of stock and unavailable.

பொருந்தொற்றின்‌ காரணமாக ‘‘லாக்‌-டவுன்‌’’அறிவிக்கப்பட்டு நாம்‌ வீட்டில்‌ அடைந்து கிடந்த காலத்தில்‌ ‘‘வரும்‌ நாளெல்லாம்‌ வெறும்‌ நாளாகிவிட்டதே’ என்று பலரும்‌ சோர்ந்து நின்றபோது, ‘‘ சும்மா இருந்தாலும்‌ சுற்றித்‌ திரிந்தாலும்‌ ஒவ்வொரு நாளும்‌ திருநாளே’’ என்று சொன்னாள்‌ என்னைக்‌ கொத்தடிமையாகக்‌ கொண்ட பச்சைப்புடவைக்காரி. அதை ஆர்வமுள்ள அனைவருக்கும்‌ சொல்லச்‌ சொன்னாள்‌. அப்படிச்‌ சொன்னதன்‌ ஆன்மிக நூல்‌ வடிவம்தான்‌ ‘‘நாளாம்‌ நாளாம்‌ திருநாளாம்‌’’ ‘‘கடுப்பேத்தறார்‌ மை லார்ட்‌’’ என்ற வடிவேலுவின்‌ காமெடியும்‌, குறிப்பும்‌ பேரேடும்‌ எப்படி எழுத வேண்டும்‌ என்று கணக்குப்பிள்ளைத்‌ தொழிலைப்‌ பற்றிய செய்தியும்‌ எப்படி ஆன்மிகமாகும்‌ என்று சிலர்‌ கேட்பார்கள்‌. வடிவேலுவின்‌ காமெடியை வைத்து புத்தரின்‌ மனநிலையை விளக்கியிருக்கிறேன்‌. கணக்குப்பிள்ளை செய்யும்‌ வேலையை வைத்து நம்‌ கர்மக்கணக்கு எப்படி வேலை செய்கிறது என்று கோடி காட்டியிருக்கிறேன்‌. ஆன்மிகம்‌ என்பது அன்றாட வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது என்று நீங்கள்‌ நினைத்தால்‌ இது உங்களுக்கான புத்தகம்‌ இல்லை. அன்றாட வாழ்க்கையோடு தொடர்பில்லாத ஆன்மிகம்‌ அர்த்தமற்றது என்று நீங்கள்‌ நினைத்தால்‌ இந்தப்‌ புத்தகத்தில்‌ உங்களுக்கு ஒரு பெரிய விருந்தே காத்திருக்கிறது.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “நாளாம் நாளாம் திருநாளாம்”

Your email address will not be published. Required fields are marked *