“பகவத்கீதை என்ன சொல்லுது?” “கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே, இதைத் தாண்டி கீதையைப் பற்றி ஒன்றும் தெரியாமலேயே பல யுகங்கள் வாழ்ந்துவிட்டோம். பகவத் கீதை என்பது என்ன? ஒரு போர் வீரனை முன்னிருத்தி இறைவன் மானுட இனத்திற்கே எழுதிய காதல் கடிதம்தான் கீதை. தான் மனதாரக் காதலிக்கும் மானுட இனம் தவறுகள் செய்து துன்பத்தில் மாட்டிக்கொண்டுவிடக்கூடாதே என்ற ஒரு காதலனின் ஆதங்கம் கீதை முமுவதும் பரிமளிக்கிறது. இறைவனின் காதலைப் பெற்ற பாக்கியசாலிகளாக பகவத் கீதையைப் படிக்கும்போது நமக்குப் பல அரிய வைரவைடூரியங்கள் கிடைக்கின்றன. கிடைத்ததில் சிலவற்றைக் கொண்டு இரண்டு பகுதிகளாக உருவாக்கப்பட்ட நூல்தான் கண்ணன் என்னும் காதல் தெய்வம். – வரலொட்டி ரெங்கசாமி.
Be the first to review “கண்ணன் என்னும் காதல் தெய்வம் பாகம்-1”