கந்தனே உனை மறவேன்

திருப்புகழ் மதிவண்ணன்

220.00

வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு வளமும், நலமும் அருளி வாழ்விக்கும் தெய்வமாக ஆறுமுகப்பெருமான் விளங்குகிறார். ‘‘சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை! சுப்ரமண்யருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை!’’ என்பது பழங்காலம் தொட்டுப் பயின்று வரும் பழமொழி! வேத வியாசர் அருளிய பதினெட்டுப் புராணத்தில் அளவாலும், மகிமையாலும் முன்னிற்பது முருகவேளின் வரலாறு. அவ்வரலாற்றை நம் அன்னைத் தமிழில் அரிய காவியமாகப் பாடியவர் காஞ்சி குமரகோட்டத்தின் அர்ச்சகரான கச்சியப்பர். பத்தாயிரத்திற்கும் மேலாகப் பைந்தமிழ்ச் செய்யுட்கள் கொண்ட அந்த கந்தபுராணத்தின் கதைச் சிறப்பும், காவிய வளமும் பலரும் அறிந்து கொள்ளும் வகையில் புனையப்பட்டதே இந்தப் புத்தகம். ‘கந்தனே உனை மறவேன்’ என்னும் தலைப்பில் முருகனுக்கே உரிய சுக்கிரவாரமான வெள்ளிக்கிழமைகளில் தினமலர் ஆன்மிகமலர் இதழின் மூலமாக முப்பத்து மூன்று வாரங்கள் இந்த தொடர் வெளிவந்தது. வாரந்தோறும் வாசகர்களின் மனம் கவர்ந்த பாராட்டைப் பெற்ற இத்தொடர் பன்முறை படித்துப் பாதுகாக்கும் வகையிலும், பரிசளித்து மகிழும் விதத்திலும் தரமான நுால் வடிவில் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் வெளியூடாகத் தற்போது தங்கள் கரங்களில் தவழ்கிறது. வாசகர்களாகிய உங்களுக்கம் வாரம் தோறும் வெளியிட்டும், நுாலாக்கியும் ஆதரவு நல்கும் தினமலர், தாமரை வெளியீட்டாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்து மகிழ்கின்றேன். ‘அடியவர் இச்சையில் எவை எவை உன்றன் அவை தருவித்து அருள்பெருமாளே!’ என்று கந்தப்பெருமானின் கருணைத் திறத்தை திருப்புகழில் அருணகிரிநாதர் பாராட்டி மகிழ்கின்றார். எனவே, ‘கந்தனே உனை மறவேன்’ நுாலின் வாசகர்கள் அனைவரது நலனுக்காகவும் திருப்போரூர் ஸ்ரீகந்தசாமிப் பெருமான் திருவருளை வேண்டி வணங்குகிறேன். – திருப்புகழ் மதிவண்ணன்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “கந்தனே உனை மறவேன்”

Your email address will not be published. Required fields are marked *